search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி தலைவர்"

    • திருப்பத்தூர் அருகே பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் மன்ற தலைவராக பதவி வகித்த அ.புசலான் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் பேரூராட்சிக்கு துணை சேர்மனாக பதிவி வகித்த கே.பி.எஸ். பழனியப்பன் கடந்த மாதம் 30-ந்தேதி பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார்.

    தொடர்ந்து புதிய சேர்மன் பதவிக்காக போட்டியிடுவதற்கான அறிவிக்கையை செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் வெளியிட்டார். இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து பொறுப்பு சேர்மனாக பதவி வகித்து வந்த பழனியப்பன் ஒரு மனதாக புதிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி சான்றிதழை அவரிடம் செயல் அலுவலர் வழங்கினார்.

    இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணன், சேக்கப்பன், நிலோபர்நிஷா, கணேசன், சித்ரா தேவி, அமுதா, அழகு, பாப்பா, குமார், தன பாக்கியம், இளநிலை உதவியாளர் சேர லாதன், வரி தண்டர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் ராம சாமி, கருப்பையா நெற்குப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மாணிக் கம், முருகேசன், ஜெய்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.
    • தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்கைக்குன்று குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும், குடிநீரில் பாசிகள் கலந்து வருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உடனடியாக பேரூராட்சி தலைவர் யுவராஜ் பேரூராட்சி பணியாளர்களை வரவழைத்து, அவர்களுடன் நீர்தேக்த தொட்டிக்குள் இறங்கினார்.

    பின்னர் அங்கு படிந்திருந்த சுவர் பாசிகளை அகற்றி, பிளிச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்யும் தூய்மை பணியிலும் ஈடுபட்டார். இதை பார்த்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பகுதி மக்கள், தலைவரே களம் இறங்கி தூய்மை செய்யும் இந்த செயலை வெகுவாக பாராட்டினார்கள்.

    • மாற்றுக்கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
    • திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுக்கட்சியினர் 10,000பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிமன்ற 4வது கவுன்சிலர் மைதிலி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 9வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, சாமளாபுரம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் பாலசந்தர் உள்பட பலர் திமுகவில் இணைந்தனர்.

    • பொதுமக்களிடம் வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
    • சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யம்பாளையம்,வேலாயுதம்பாளையம்,பள்ளபாளையம், காளிபாளையம், சாமளாபுரம்,கருகம்பாளையம்,கள்ளப்பாளையம்,செந்தேவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.சாமளாபுரம் பேரூராட்சியில் மொத்தமாக 15 வார்டுகள் உள்ளது.

    சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவராக விநாயகாபழனிச்சாமி உள்ளார். அவர் சைக்கிளில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகள் பற்றியும் , பொதுமக்களிடம் வி.அய்யம்பாளையம் காலனி பகுதிக்கு தேவையான அடிப்படை தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

    பின்னர் வி.அய்யம்பாளையம் காலனி பொதுமக்கள் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவரிடம் சமுதாய நலக்கூடம் அமைத்துத்தர வேண்டும் என தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதிக்கொடுத்தனர். பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் இது குறித்து பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கூறுகையில், தினந்தோறும் காலை 6 மணியளவில் சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தண்ணீர் விநியோகிப்பாளர்களுக்கு எந்தெந்த பகுதியில் வேலை என சரிபார்த்து அனுப்பி வைப்பேன்.

    தொடர்ந்து காலையில் தினந்தோறும் சைக்கிள் மூலமாக சுழற்சி முறையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் ஒவ்வொரு வார்டாக சென்று,மக்களை தேடி பஞ்சாயத்து நிர்வாகம் என்ற அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறேன் என்றார். 

    • 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிகுந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சுமார் 450 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது.
    • திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை விட மனு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிக்கது. இங்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி சுமார் 450 வருடங்க ளாகி விட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று திரு ப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்து வதற்கு முதலமைச்சர் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்க்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், அனைத்து தரப்பினரும் கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள வசதியாக ஜூலை 6ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அன்றைய தினம் திருவட்டார் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும். திருவட்டார் பஸ்நிலைய சந்திப்பிலிருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெருக்கடிகளை சரி செய்ய வேண்டும்.

    கோயிலை சுற்றி பக்தர்களின் பாதுகாப்புக்காக நிரந்தரமாக கண்காணிப்பு கேமரா க்கள் அமைக்க வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.

    ×